உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன துளையிடும் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மீட்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துளையிடப்பட்ட குழியில் 6 இன்ஞ் பைப்பை உள்ளே செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே மீட்பு பணியை ஆய்வு செய்வதற்காக இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்யர் சிங் தாமி ஆகியயோர் நேரில் செல்கின்றனர்.