டெல்லியில் காற்று மாசு சிறிதளவு குறைந்துள்ள நிலையில், நாளை முதல் (நவம்பர் 20) பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு உச்சகட்டத்தை அடைந்ததைத்தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த 17-ந்தேதி காற்று மாசு அளவு (AQI) 405 ஆக இருந்த நிலையில் இன்று 398 ஆக குறைந்துள்ளது. இதனையடுத்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.
எனினும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.