உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆரவாரத்தில் சென்னை ரசிகர்கள் !
Oct 22, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆரவாரத்தில் சென்னை ரசிகர்கள் !

Web Desk by Web Desk
Nov 19, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த இந்தியர்களும் 12 வருடமாக காத்துக் கொண்டிருந்த வெற்றிக்காக இந்திய வீரர்கள் போராடும் நாள் இன்று.  உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

அனைத்து ஆட்டங்களிலும் அபார வெற்றியைப் பெற்று இந்த உலகக்கோப்பைப் போட்டியில் அசைக்க முடியாத அணியாக திகழும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்குகிறது.

இந்திய அணியின் வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். சென்னையிலும் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய திரை அமைக்கப்பட்டு ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே 38 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் லேசர் ஷோ, விமான சாகசம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆட்டத்தை காண்பதற்கும், வெற்றியை கொண்டாடுவதற்கும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் மெரினாவில் ரசிகர்கள் திரள்கின்றனர்.

பெண் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு திரண்டிருந்தனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளிலும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை மனதில் வைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக வெறித்தனமாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

இப்படி நாடு முழுவதும் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஜூரம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவே காணப்பட்டது.

இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள். இந்திய அணி கோப்பையை வென்று இந்திய மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

Tags: india vs Australiaicc world cup cricketchennai cricket fans
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூரில் நேதாஜி படத்திற்கு அஞ்சலி செலுத்திய ராஜ்நாத்சிங்!

Next Post

வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்!

Related News

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies