நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப் போட்டு வருகிறது. இதில், இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிதிருந்தார்.
படத்தில், தமக்கு குறைந்த காட்சிகள் ஒதுக்கியதாக, மன்சூர் அலிகான் அதிருப்தி அடைந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜை சரமாரியாக விமர்சித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், முன்பு எல்லாம், படத்தில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சி அதிகம் இருக்கும்.
இப்போது அது குறைந்துவிட்டது. அதுவும் இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை எனச் சர்ச்சையாகப் பேசினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்தப் பேச்சை பெண் வெறுப்பு, அவமரியாதை, மோசமான ரசனை என்றும், இது போன்ற வெறுக்கத்தக்க ஒரு நடிகருடன் காட்சியைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நன்றி என்றும், வரும் காலத்தில் இது போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
இதுபோல, பல்வேறு தரப்பில் இருந்தும், மன்சூர் அலிகானுக்கு கண்டனக்குரல் வலுத்து வருகிறது.