திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டுக் காரில் பாலகிருஷ்ணன் (65), செல்வி (64), தமிழ்மணி (30), சித்ரா (28), கலாராணி (55) மற்றும் தில்லை அரசி (52) ஆகியோர், தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று பழனிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, டேங்கர் லாரியும், காரும் மணக்கடவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த அலங்கியம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாித்துவருகின்றனர்.
இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.