நாடாளுமன்றத்தில் 712 தனி நபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றுவதற்கு முன்பு, அது மசோதாவாக தாக்கல் செய்யப்படும். அந்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் அறிமுகம் செய்யப்படும்.
உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் அவை சட்டமாக்கப்படும்.
இதில், அமைச்சர்களாக இல்லாதவர்கள் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் தனிநபர் மசோதா என அழைக்கப்படும்.
அந்த வகையில், மக்களவையில் இதுவரை 712 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள் கடந்த 2019 -ம் ஆண்டு மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது.