ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா! 140 கோடி இந்தியர்கள் உங்களின் வெற்றிக்காக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் பிரகாசமாக ஒளிர வேண்டும், நன்றாக விளையாடி உங்கள் விளையாட்டுத் திறனை நிலைநிறுத்த வேண்டும் என்றும், இந்திய அணிக்கு வாழ்த்துகள்.என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.