இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படித்த பள்ளிக்கு நாளை விடுமுறையை பள்ளி நிர்வாகம் அறிந்துள்ளது
ஒரு நாள் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பட கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படித்த பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிந்துள்ளது அப்பள்ளி நிறுவனம்.
ரோஹித் சர்மா மும்பையில் உள்ள “அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி ஹைஸ்கூல்” (Our Lady of Vailankanni High School) என்ற பள்ளிக் கூடத்தில் தான் சிறு வயதில் படித்தார்.
தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை விளையாடி வருவதால், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இரவு வரை பார்க்க வேண்டும் என்பதால் அடுத்த நாளான நவம்பர் 20 திங்கள் அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் ரோஹித் சர்மா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க இருப்பதால் மாணவர்கள் அந்தப் போட்டியைக் கண்டு களித்து மறுநாளும் ஓய்வு எடுக்கும் வகையில் விடுமுறை அளித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
மேலும், வேளாங்கண்ணி பள்ளி நிர்வாகம் சார்பில் சிறுவனாக ரோஹித் சர்மா அந்த பள்ளியில் சேர்ந்த போது கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
பேஸ்புக்கில் வெளியான இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.