இந்தியா வெற்றி பெற்றால், பயணிகளுக்கு 5 நாட்கள் இலவச பயண வசதியை வழங்குவேன் என சண்டிகாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் என்பவர் கூறியுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா வெற்றி பெற்றால், பயணிகளுக்கு 5 நாட்கள் இலவச பயண வசதியை வழங்குவேன் என சண்டிகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் என்பவர் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, நம்முடைய அணி நன்றாக விளையாடி வருகிறது. இந்தியா வெற்றிப் பெற்றால், 5 நாட்களுக்கு ஆட்டோவில் இலவச சவாரி வழங்குவேன். இந்தியா இன்று வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறினார்..
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், ஒவ்வொருவருக்கும் 10 நாட்கள் வரை எனது ஆட்டோவில் இலவச பயணம் செய்து கொள்வதற்கான வசதியை வழங்குவேன் என கூறினார்.
ஆனால், அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனது. இங்கிலாந்து அணி சாம்பியனானது.
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போது, இந்திய ராணுவம் பழி தீர்க்குமென்றால், அதற்காக ஒரு மாதம் இலவச சவாரி வழங்குவேன் என அனில் அப்போது கூறினார். இந்திய ராணுவம் பழித்தீர்த்த நிலையில் அவர் கூறியதுபோலவே, சண்டிகரில் ஒவ்வொருவருக்கும் இலவச சவாரியை வழங்கினார்.