ராஜஸ்தான் மாநிலத்தின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் காங்கிரஸ் அரசு கேடு விளைவித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஹாஹ்புராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் காங்கிரஸ் அரசு கேடு விளைவித்துள்ளதாக கூறினார்.
ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அசோக் கெலாட் தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அவர் கூறினார்.
தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாதவர்கள் ஆட்சி நடத்துவதற்கே தகுதி இல்லாதவர்கள் என்றும் ராஜ்நாத்சிங் சாடினார்.
உலகின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான அரசியல் கட்சி பாஜக என்றும் அவர் குறிப்பிட்டார். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாகவும் ராஜ்நாத்சிங் பெருமிதம் தெரிவித்தார்.