ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை அடித்துள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 241 ரன்கள் இலக்கு.
ஒரு நாள் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பட கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்களில் ரோஹித் சர்மா சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்துகொண்டு வந்தார். அப்போது மறுமுனையில் இருந்த கில் 7 பந்துகளில் 4 ரன்களுக்கு மிட்சேல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி மிட்சேல் ஸ்டார்க் பந்தில் 7 வது ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரீஸ் ( 4,4,4 ) அடித்து அசத்தினார். அப்போது மறுமுனையில் இருந்த ரோஹித் சர்மா சிக்சர்களாக அடித்து வந்தார்.
கடைசியாக ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளை போலவே 4 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்களுக்கு கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 1 பௌண்டரீஸ் அடித்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கே.எல். ராகுல் களமிறங்கினார்.
ராகுல் மற்றும் விராட் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி 57 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார்.
பின்னர் 29 வது ஓவரில் பாட் கம்மின்ஸ் பந்தில் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 63 பந்தில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா சற்று நிதானமாக விளையாடி வந்தார்.
அப்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் 86 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார். அப்போது கோலியின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 9 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அரைசதம் எடுத்த கே.எல்.ராகுல் 42 வது ஓவரில் மிட்சேல் ஸ்டார்க் பந்தில் 1 பௌண்டரி என மொத்தமாக 107 பந்தில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிதானமாக விளையாடி வந்து 18 பந்துகளிலும் அவருடன் விளையாடி வந்த ஷமி ஒரு பௌண்டரி அடித்து 6 ரன்களும் ஆட்டமிழக்க பின்பு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதில் முகமது சிராஜ் ஒரு பௌண்டரி அடித்தார், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை அடித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்களும், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்களும் ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 241 ரன்கள் இலக்காக உள்ளது.