மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று அதிகாலை 5.09 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.