எல் சால்வடார் நாட்டின் தலைநகரான சான் சால்வடாரில் ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அப்போது, பல்வேறு கட்ட போட்டிகளுக்கு மத்தியில், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, நிகராகுவா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதி மூன்று இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த போட்டியாளர் ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் 20 இடங்களில் இடம் பிடித்தார். ஆனால், நீச்சல் உடை சுற்றில் அவர், முதல் 10 இடங்களுக்குள் வரமுடியாமல்போனது. இதனால், ஸ்வேதா ஷர்தா வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில், நிகராகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலக அழகிக்கான பட்டம் முறைப்படி வழங்கப்பட்டது.
இதனிடையே, குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த மிஷேல் கான் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கமிலா ஆகியோரும் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், இவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.