உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர் இருக்கும் பகுதியை 6 இன்ஞ் பைப் நெருங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன எந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. அந்த குழாயில் 6 இன்ஞ் பைப் செலுத்தும் பணி நடைபெற்று வந்தது.
அந்த 6 இன்ஞ் பைப் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதியை நெருங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்க பெரிய துளை அமைக்கும் பணி தனியாக நடைபெற்று வருகிறது.
மேலும், மீட்புப்பணியில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.