சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83.
இந்தியாவில் புகழ் பெற்ற கண் மருத்துவமனைகளில் ஒன்று சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த மருத்துவமனையில், ஏழை, எளியவர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் நிறுவனர் எஸ். எஸ். பத்ரிநாத். இவர், வெளிநாடுகளில் படித்தவர். ஆனால், 1978 -ம் ஆண்டுச் சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, அன்று முதல் இன்று வரை ஏழை எளியவர்களுக்கு மருத்துவச் சேவை செய்து வருகிறார்.
இதனால், சிறந்த சேவைக்காகக் கடந்த 1996 -ம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அவரது வீட்டில் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்.