இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சுற்றுப்பயணத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறயுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறாத நிலையில் இளம் வீரர்கள் இத்தொடரில் இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்ற கேள்வி கடந்த சில நாட்களாக பேசு பொருளாகவே இருந்தது. அந்த நிலையில் தற்போது பிசிசிஐ டி20 கேப்டனை அறிவித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சுற்றுப்பயணத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வீரர்கள் :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
மேத்யூ வேட் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா.
போட்டி அட்டவணை :
முதல் டி20 : நவம்பர் 23 – விசாகப்பட்டினம்.
இரண்டாம் டி20 : நவம்பர் 26 – திருவனந்தபுரம்.
மூன்றாவது டி20 : நவம்பர் 28 – கவுகாத்தி.
நான்காவது டி20 : டிசம்பர் 1 – ராய்பூர்.
ஐந்தாவது டி20 : டிசம்பர் 3 – ஹைதராபாத்.