தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பள்ளத்தாக்கின் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3.9 டிகிரி செல்சியஸாகவும், ஸ்ரீ நகரில் மைனஸ் 1.2 டிகிரி செல்சியஸாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ நகர் சர்வதேச விமான நிலையத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறைந்ததால் காஷ்மீரில் குளிர் அலை தீவிரமடைந்தது.
காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளை அடர்த்தியான பனி மூடியுள்ளது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
காஷ்மீரின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில் குறைந்தபட்சம் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது, குல்மார்க் ஸ்கை ரிசார்ட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை முகாமான பஹல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது, புல்வாமாவில் மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் ஆக குளிர் பதிவாகியுள்ளது.