இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் இளைஞர்கள் பலர் எந்தவித காரணமுமின்றி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்து வருவதாகவும், இதற்கு, கொரோனா தடுப்பூசியே காரணம் என்றும் பரவலாகப் புகார் எழுந்தது.
இதனால், இந்திய ஆராய்ச்சி மருத்துவக் கழகம் இது குறித்து 2021 -ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 -ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாடு முழுவது உள்ள 47 மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தியது.
குறிப்பாக, 18 வயது முதல் 45 வயதுள்ள 729 பேரின் மரணங்களை மையமாக வைத்து அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்குக் கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்றும், அவர்களது வாழ்க்கை முறை, தனிப்பட்ட உடல் நலக் கோளாறு, தீய பழக்க வழக்கம் போன்றவையே காரணம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா பரவல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்குத் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்புக் குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.