2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல் கீப்பர் விருதை பெற்ற சவிதா தொடர்ந்து மூன்றாது முறையாக இந்த விருதுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருதுக்கு பல நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்படுவர்.
அதுபோல இந்த ஆண்டு சிறந்த கோல் கீப்பர் விருதுக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
இதற்கு முன்பு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல் கீப்பர் விருதை பெற்ற சவிதா தொடர்ந்து மூன்றாது முறையாக இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய சவிதா, ” நான் விளையாட தொடங்கியப் போது, இவ்வளவு தூரம் வருவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை, இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், எனது அணியினருக்கும் மிகவும் பெருமையான தருணம், அதேபோல் இதற்கு எனது அணியினரும், குடும்பமும் தான் முக்கிய காரணம்” என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 7 வது ஹாக்கி ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியவர் சவிதா புனியா என்பது குறிப்பிடத்தக்கது.