தெலுங்கானாவை கடனில் மூழ்கும் மாநிலமாக முதல்வர் சந்திரசேகரராவ் மாற்றியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் மல்காஜ்கிரி பாஜக வேட்பாளர் என் ராம்சந்தர் ராவுவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசியவர், 2014-ம் ஆண்டு உருவானபோது வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலுங்கானா, வருவாய் பற்றாக்குறை மாநிலமாக கேசிஆர் ஆட்சியில் மாறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
தெலுங்கானாவின் அடுத்த இரண்டு முதல் மூன்று தலைமுறைகள் கடனைத் திருப்பிச் செலுத்தும். வருவாய் பற்றாக்குறை மாநிலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மதுபானம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதை எதிர்க்கும் மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று, அவை ஜிஎஸ்டியின் கீழ் வந்தால், விலைகள் நியாயமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மட்டுமல்ல, பிற பாதுகாப்பு உபகரணங்களும் கிடைக்காமல் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவை 10 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், , “கே.சி.ராவை தேசியத் தலைவராக யாரும் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். தெலுங்கானா அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.