வரும் 23 -ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறும் என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில், கர்நாடகா அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே நீரை பங்கீடு செய்வதில் கடும் மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், 90 -வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு நாளை மறுநாள், அதாவது 23-ம் தேதி அன்று காணொலி வாயிலாக கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி நடந்த கூட்டத்தில் 1-ம் தேதி முதல் 23 -ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், வரும் 23 -ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடகா மாநில அரசு, தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துள்ளதா? என்பது பற்றி கணக்கீடு செய்யப்படும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.