இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சாதனை படைத்துள்ளனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்தது. இதில் கிரிக்கெட் வீரர்கள் நிறைய சாதனைகளை புரிந்தனர்.
அதிலும் மிக பெரிய சாதனை என்றால் விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்தது என்றே சொல்லலாம். அதேபோல் ரோஹித் சர்மா, முகமது ஷமி, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் சாதனைகளை புரிந்துள்ளனர்.
இப்படி பல சாதனைகளை புரிந்த இந்த உலகக்கோப்பையில் ரசிகர்களும் ஒரு சாதனையை புரிந்துள்ளனர். உலகக்கோப்பையில் இதுவரை இல்லாத அளவு ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று போட்டியை பார்வையிட்டுள்ளனர்.
இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது.
45 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து நேரில் கண்டுகளித்துள்ளனர்.
இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015யில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரை 1,016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடர் முறியடித்துள்ளது.