ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அழகர்மலை.
மதுரையின் அடையாளமான திகழ்ந்து வருவதும், சித்திரைத் திருவிழாவின் போது அழகர் வைகை ஆற்றில் இறங்குவதும், அழகர் கள்ளர் வேடத்தில் வருவதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அழகர் திருக்கோவிலில் வரும் 23-ம் தேதி, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில், மகா கும்பாபிஷேகம் காலை 10-மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் நேற்று மாலை துவங்கியது. யாக சாலையில் அரளிமர கட்டைகளைக் கொண்டு தீ மூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேதபாராயணங்கள் முழங்க கள்ளழகருக்கு யாகப் பூஜைகள் செய்யப்பட்டது. நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி, அழகர் திருக்கோவில் மின்விளக்குகளால் ஜொலித்து வருகிறது.