2023 உலக மீன்வள மாநாட்டில், ‘கோல்’ வகை மீனை குஜராத் மாநில மீனாக, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று உலகளாவிய மீன்வள மாநாடு 2023 நடைபெற்றது. இதனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்.
மீன்வள மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் கூறியதாவது, “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், குஜராத் சிறந்த மாநிலமாக மாறியுள்ளது. மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இன்று ‘கோல்’ வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம் என்று கூறினார்.
மேலும், நாட்டிலேயே மிக நீளமான ஆயிரத்து 600 கிலோ மீட்டர் கடற்கரையைக் குஜராத் மாநிலம் கொண்டு உள்ளது. கடல் மீன் உற்பத்தியில், குஜராத் மாநிலம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.
தற்போது, குஜராத் மாநிலம் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மீன்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் மொத்த மீன் ஏற்றுமதியில், குஜராத்தின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. முதல் உலக மீன்வள மாநாட்டை நடத்துவதற்கு ஏற்ற மாநிலம் குஜராத் ஆகும்.
உள்நாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்தைக் கட்டியெழுப்புவதில் நீலப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. நமது நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மீன்வளத்துறையுடன் தொடர்புடையவர்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தனி அமைச்சகம் ஏற்படுத்தவில்லை.
பிரதமர் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக மீன்வளத்துறை அமைச்சகம் தொடங்கப்பட்டு, இந்த அமைச்சகத்துடன் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு மீன்பிடி கடந்த ஒன்பது ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் விவசாய உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என்று குஜராத் முதல்வர் மேலும் கூறினார்.
பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி தலைமையேற்ற பிறகுதான், முதன்முறையாக மீன்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதற்காக ரூபாய் 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.