நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
Jun 7, 2025, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். இன்றைய வெப்பநிலை 25-27 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: chennai heavy rainfall
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Next Post

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை – திருச்சியில் பரபரப்பு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies