சென்னை ராயபுரத்தில் வசித்து வரும் பொது மக்கள் பலரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டியபடியே நடந்து செல்கிறார்கள்.
காரணம், கொஞ்சம் அசந்தாலும், ஏதாவது ஒரு திசையில் இருந்து பாய்ந்து வரும் வெறி நாய், மனிதர்களை பதம் பார்த்துவிடுகிறதாம். பகலில் பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய், இரவில் பொது மக்களை புரட்டிப்போட்டு கடிக்கிறதாம்.
தற்போது பனிகாலம் என்பதால், ராயபுரம் முழுவதும் இரவு நேரத்தில் தெரு நாய்கள் குழுவாக சேர்ந்து கொண்டு சாலையில் பைக் அல்லது காரில் செல்பவர்களை துரத்தித் துரத்திக் கடித்துக் குதறுகிறதாம்.
நாய்க்கடியால் அவதிப்படும் பலரும், அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, மறைத்து வைத்துள்ளனர். ஆனால், நாளுக்குநாள் நாய்கடி பட்டோரின் எண்ணிக்கை 27- ஆக அதிகரிக்கவே, பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டனர்.
வட சென்னையில் உள்ள அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலே, நிஜம் புரிந்துவிடும்.
பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை எனில், நாய்க்கடிக்கு உள்ளானோரின் எண்ணிக்கை சதத்தை எட்டிவிடும்.
என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி. பொறுத்திருந்து பார்ப்போம்.