ரியல் எஸ்டேட் துறையில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்து வருவதால், சீன அரசு பொருளாதாரத்துறையில் தடுமாறி வருகிறது.
சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இது உலகின் பொருளாதாரத்தில் கால் பங்கிற்கு மேல் அங்கம் வகிக்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் ரியல் எஸ்டேட் தொழில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. இதனால், சீனாவின் ரியல் எஸ்டேட் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
காரணம், சீனாவில் உள்ள எவர்கிராண்டே குரூப் மற்றும் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் உட்பட நாட்டின் முன்னணி டெவலப்பர்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால், மில்லியன் கணக்கான வீடு வாங்கியவர்கள், தங்கள் முதலீடுகளை முழுமையடையாத வீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தியதால் சிக்கலில் உள்ளனர்.
தற்போது கிடைத்த ஆய்வுகளின்படி, கடந்த மாதம் முதலீடு மற்றும் சொத்து விற்பனை இரண்டும் கடந்த ஆண்டை விட சீனாவில் 11 சதவீதம் குறைந்துள்ளது.
சீன அரசு, சப்ளையர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பொது மக்களின் மிகவும் ஆவேசப்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் முதல் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் எழுந்த பிரச்சினைகளில், 1,777 -க்கும் அதிகமான பிரச்சினைகள் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பானவை. இதனைத் தீர்க்கக் கோரி, சுமார் 276 நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
கருத்து வேறுபாடுகளை உடைய அணுகுமுறையைச் சீன அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருவதும், பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைத் தீர்ப்பதில் அரசும், நீதிமன்றங்களும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இதனால், சீன அரசு ஆட்டம் கண்டு வருகிறது. பொது மக்களின் ஆதரவையும் இழந்து வருகிறது.