இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நினைவடைந்த நிலையில் இன்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணியளவில் தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். மேலும் இப்போட்டியில் அனுபவ வீரர்கள் என்றால் யாரும் இல்லை, அனைவரும் வளர்ந்துவரும் இளம்வீரர்களே.
மறுபுறம் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளனர் அதிலும் நடப்பு உலகக்கோப்பையில் பங்கேற்ற வீரர்கள் உள்ளனர்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 11 சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அடுத்த இரு மாதங்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20-ல் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது இஷான் கிஷன்களமிறங்கக்கூடும்.
ஒருநாள் போட்டிக்கான அணியை போன்று இல்லாமல் தற்போதைய அணியில் 7 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோருடன் திலக் வர்மா, ரிங்கு சிங், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அக்சர் படேல், ஷிவம்துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடது கை பேட்ஸ்மேன்களே.
மேலும் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 46 % வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 54% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.