கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் ரூபாய் 18 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான, 352.4 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சிலர் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்த, பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், அவரது உடைமைகளைச் சோதனை செய்தனர். அதில், 18 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 352.4 கிராம் இருந்தது.
இதனை அடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 352.4 கிராம் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.