தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 96.
கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா பீவி. இவர் சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
இந்தியாவின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். கேரள மாநிலத்தில் நீதிபதியாகப் பணியாற்ற பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாகப் பணியாற்றினார். தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழகத்தில், 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தார். கருணாநிதி ஆட்சியின் போது தமிழக ஆளுநராக இருந்ததால், அன்றைய காலகட்டத்தில், கருணாநிதிக்கும், ஃபாத்திமா பீவி-க்கும் இரண்டு விஷயங்களில் மோதல் வெடித்தது.
ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் புதிய பிரிவைத் துவக்கியதற்கு ஆளுநர் தடை போட்டார். அடுத்து, மதுரை காமராஜர்பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தி. இதனால், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், ஆளுநர் ஃபாத்திமா பீவி-க்கும் இடையே கடும் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஃபாத்திமா பீவி இன்று காலமானார்.