தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள முருகு பள்ளியில், உலகிலேயே முதல் முறையாக, 3டி எனப்படும் முப்பரிமாண வடிவிலான கோவில் கட்டப்பட்டுள்ளது.
உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. புதுப்புது கண்டுப்பிடிப்புகள் பெருகி வருகிறது. அந்த வகையில், உலகில் முதல் முறையாக, தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அருகே உள்ள முருகு பள்ளி பகுதியில், 3டி வடிவிலான கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மழை, நிலநடுக்கம் ஆகியவற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு 35.5 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்கள் உள்ளது. இந்தக் கோவிலில் மோதகம் வடிவில் விநாயகருக்கு ஒரு கருவறையும், சதுர வடிவில் சிவபெருமானுக்கு ஒரு கருவறையும், தாமரை வடிவில் பார்வதி தேவிக்கு ஒரு கருவறையும் என 3 கருவறைகள் கட்டப்பட்டுள்ளன. மூலவராக கணபதி அமர்ந்து அருள்பாலிக்க இருக்கிறார்.
இந்தக் கோவிலில் தூண்கள், தரை ஆகியன வழக்கமான முறையிலேயே கட்டப்பட்டுள்ளன. கோவில் விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.