உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தோல்விக்கு பிரதமர் காரணம் என்றால், 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாக்கி போட்டியின் தோல்விக்கு யார் காரணம் ?
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி நவம்பர் 19 ஆம் தேதி நிறைவுபெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 9 லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது அதேபோல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா அதிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
போட்டி முடிந்த பின்னர் தோல்வியடைந்த இந்திய வீரர்களை ஊக்கப் படுத்துவதற்காக ஓய்வறைக்கு சென்று அணைத்து வீரர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்ததே காரணம் என்ற வகையில் பேசியிருந்தார்.
இந்த கருத்தை குறித்து பாஜக தொடர்கள், கிரிக்கெட் இரசிகர்கள் என அனைவரும் ராகுல் காந்தியை கண்டித்தனர்.
இந்த வகையில் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் இந்திரா காந்தி குறித்த கருது ஒன்று பேசும் பொருளாகி வருகிறது.
1982 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடியது.
டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியை காண அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்றுள்ளார். அப்போது இந்திய அணி மோசமாக விளையாடி வந்தது. அதனை கண்டா இந்திரா காந்தி இந்தியா தோல்வியடைய போகிறது என்று தெரிந்ததும் மைதானத்திலிருந்து சென்றுள்ளார்.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதை பதிவிட்ட நெட்டிசன்கள் அன்று இந்திரா காந்தி மைதானத்திற்கு சென்றதால் தான் இந்தியா தோல்வியடைந்தது என்று பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இந்திரா காந்தி அவர்கள் இந்தியா தோல்வியடையப் போகிறது என்று தெரிந்தவுடன் மைதானத்தில் இருந்து வெளியே கிளம்பிவிட்டார். ஆனால் நம் பாரத பிரதமரோ வீரர்களின் ஓய்வறைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் அளித்தார் என்று நெட்சன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது அதனால் தான் இந்திய தோல்வியடைந்தது என்றும் பலர் பகிர்ந்துவருகின்றனர்.