அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேகம், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று உலக இந்து அறக்கட்டளை தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான சுவாமி விக்யானானந்த் கூறினார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உலக இந்து மாநாடு 2023 இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கி இருக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாட்டை, உலக இந்து அறக்கட்டளையின் தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான சுவாமி விக்யானந்த் ஒருங்கிணைந்து வருகிறார்.
இந்த நிலையில், சுவாமி விக்யானந்த் கூறுகையில், “அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள இராமர் கோவிலின் கும்பாபிஷேகம், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதையொட்டி, நாங்கள் அயோத்தியில் இருந்து பிரசாதத்தை ஆர்டர் செய்துள்ளோம்.
மேலும், அயோத்தி கோயிலின் பிரதி இங்கு கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தியில் இருந்து ராம் லல்லா பிறந்த இடத்தின் படத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் படத்தின் நகல்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட நிகழ்வை நாம் ஒன்றாக அனுபவிப்போம்.
இன்றைய உலகில் இந்துக்களின் அடையாளத்தையும், மதிப்பையும் மேம்படுத்துவதே உலக இந்து மாநாட்டின் நோக்கம். பொருளாதாரம், கல்வி , ஊடகம் மற்றும் அரசியல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். இப்பகுதிகளை வலுப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பலப்படுத்த முடியும்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ‘இந்து’ என்ற வார்த்தையின் பொருத்தம் குறைந்துவிட்டதாகத் தோன்றியது. இந்த வீழ்ச்சியை நாங்கள் மாற்றியுள்ளோம். இப்போது, உலகமே இந்து அடையாளத்தை பெருமையுடன் பறைசாற்றுகிறது பல நாட்டு தலைவர்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இது மிக முக்கியமான மாற்றம், இதை நாங்கள் எங்களின் வெற்றியாக கருதுகிறோம். 2-வது நீங்கள் கவனித்திருக்க வேண்டியது என்னவென்றால், நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறோம். எங்கள் விதிமுறைகளின்படி, நாங்கள் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று அடையாளப்படுத்துகிறோம். ‘பாரத்’ இப்போது பிரதான நீரோட்டமாக மாறிவிட்டது. இது எங்களின் வெற்றி, நமது முயற்சியின் தாக்கம்” என்றார்.