13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெற்றது.
ஆந்திர பிரதேசம் – சண்டிகர் ; ஜார்கண்ட் – கோவா ;ஜம்மு காஷ்மீர் – மத்திய பிரதேசம் ; பெங்கால் – மணிப்பூர் ; மகாராஷ்டிரா – திரிபுரா.
இதில் பெங்கால் மற்றும் மணிப்பூர் அணிகளிடையே நடைபெற்றப் போட்டியில் இருஅணிகளும் தலா 3 கோல் அடித்து 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆனது.
இந்தப் போட்டியில் தொடக்கத்தில் மணிப்பூர் அணியின் நிங்கோம்பம் ஜென்ஜென் சிங் 2 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு 10 நிமிடங்கள் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தனர்.
பின்னர் 25 வது நிமிடத்தில் மணிப்பூர் அணியின் நீலகண்ட சர்மா ஒரு கோல் அடித்தார். அப்போது மணிப்பூர் முன்னிலை வகித்தது.
பின்னர் 3 வது காலிறுதியில் பெங்கால் அணி தனது முதல் கோலை அடித்தது. பெங்கால் அணியின் நியூபனே நிதீஷ் 48 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து 54 வது நிமிடத்தில் மீண்டும் பெங்கால் அணியின் வீரர் ராஜேந்திர ஓரம் ஒரு கோல் அடித்தார். அப்போது இரு அணிகளும் 2-2 என்று சமநிலையில் இருந்தது.
அப்போது மீண்டும் பெங்கால் சார்பாக நியூபனே நிதீஷ் 56 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அப்போது 3-2 என்ற கோல் கணக்கில் பெங்கால் முன்னிலை வகித்தது.
அப்போது சரியாய் 60 வது நிமிடத்தில் மணிப்பூர் அணியின் நீலகண்ட சர்மா மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இறுதியாக இரண்டு அணிகளும் தலா 3 கோலை அடித்து 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆனது.