கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பேட்மிண்டன் பயிற்சியாளர், தன்னிடம் பயிற்சிக்கு வந்த 11 -ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆபாச புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், பயிற்சி ஆசிரியரை கைது செய்த காவல்துறை, அவரைப் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, பள்ளியில் இருந்து பேட்மிண்டன் பயிற்சியாளர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.