2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 -ம் தேதி முதல் புதிய சிம்கார்டு வாங்க புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. சட்ட வீதிகளை மீறினால் 10 லட்சம் அபராதம் அல்லது சிறை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி சிம்கார்டு மோசடி அதிகரித்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும், புதிய சிம்கார்டுகளை வாங்குவதற்கும், கடை விற்பனையாளர்கள் சிம்கார்டு விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளைத் தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்களின் தற்போதைய எண்களுக்கு சிம்கார்டுகளை வாங்கும்போது, ஆதார் ஸ்கேனிங் மற்றும் மக்கள் தொகை தரவு சேகரிப்பு ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரே, ஒரு ஆதார் எண் மூலம், ஏராளமான சிம்கார்டுகளை வாங்க முடியாது.
இந்த புதிய சிம்கார்டு விதிகள் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, சிம் விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயனாளிகள் முன்பு போலவே ஒரு ஐடியில் 9 சிம் கார்டுகளைப் பெறலாம் என்றும், வணிக இணைப்பு மூலம் மட்டுமே தனி நபர்கள் சிம் கார்டுகளை மொத்தமாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நடைமுறையில் இருந்த விதிமுறைகளை இனி பின்பற்றப்போவதில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.