அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் ஏகாதசி பண்டிகையையொட்டி, கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயம்.
இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாக வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் ஏகாதசி பண்டிகையொட்டி, கட்டணக் கொள்ளை நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
அதற்கு சாட்சியாக, ஏகாதசி திருநாளை முன்னிட்டு, சந்தனு மண்டபம் நுழைவுச் சீட்டு 4 ஆயிரம் ரூபாயிக்கும், அதுபோல, கிளி மண்டபம் நுழைவுச் சீட்டு 700 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டு பெறுவர்கள் டிசம்பர் 5-ம் தேதிக்குள் திருக்கோவிலில் விண்ணபிக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கட்டணக் கொள்ளைக்கு இந்து அமைப்புகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சி அமைந்தது முதலே திருக்கோவில்களில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருவதாகப் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஏகாதசி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.