சீனாவில் H9N2 பரவல் மற்றும் குழந்தைகளின் சுவாச பிரச்னை தொடர்பாக நிலவும் சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்னைகளின் பாதிப்பு ஆகிய இரண்டிலும் இந்தியாவிற்கான பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், எந்தவொரு அவசர நிலையையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகச் சீனாவில் சுவாசப் பாதிப்பு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் சுவாசப் பாதிப்பு பிரச்னைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், சீனாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வருகிறது.
H9N2 வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சகம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
சீனாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்னைகளின் பாதிப்பு ஆகிய இரண்டிலும், இந்தியாவிற்கான பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், எந்தவொரு அவசர நிலையையும் எதிகொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்றானது, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்குப் பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் மற்றும் குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.