மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 5.25 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்., காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் திருவிழா. ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்கும் உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியின் சின்னமாகும். . எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்படும் என்றும், பாஜக ஆட்சிக்கு வரும் என்று மாநில பாஜக தலைவர் ஜோசி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என பிகானரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் பாஜக மூத்த தலைவர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
உதய்பூரில் வாக்களித்த அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, “வாக்களிப்பது , நமது உரிமை மட்டுமல்ல நமது கடமையும் கூட என தெரிவித்தார்.