ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் வாக்கு பதிவு இன்று நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் தலைமுறையினருக்கு (நண்பர்கள்) வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.