ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியா வெற்றியை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் என்பது உலகெங்கிலும் உள்ள அணிகள் மற்றும் இரசிகர்களை ஈர்க்கும் ஒரு உலகளாவிய நிகழ்வு. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இப்போட்டியை காண ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை மூலமாக இந்தியாவிற்கு தோராயணமாக ரூ.22,000 கோடி வருவாய் வந்துள்ளதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பயணம், உணவு, சில்லறை விற்பனை, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் என அனைத்திலும் இப்போட்டியின் தாக்கம் உச்சம் தொட்டது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்களின் வருகை பயணத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அதேபோல் தங்கும் விடுதிகள், கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் என அனைத்தும் பொருளாதார ரீதியாக உச்சம் தொட்டது என்றே சொல்லலாம்.
அதேபோல் கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் கண்டுகளிக்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். அதிலும் இந்திய அணியின் போட்டிக்கு நுழைவு சீட்டு வாங்க போட்டிப் போட்டனர்.
இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் இரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015யில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரை 1,016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடர் முறியடித்துள்ளது.
இந்த சாதனை டிக்கெட் விற்பனையிலிருந்து நேரடி வருவாய்க்கு பங்களித்து அது மட்டுமல்லாமல் உணவு, ரசிகர்களுக்கான ஜெர்சி, பிற பொருட்கள் என மைதானத்தில் வருவாய் உயர்ந்தது.
மேலும் தொலைக்காட்சியில் பார்வையிடுபவர்கள், டிஜிட்டலில் பார்வையிடுபவர்கள் என அனைத்திலும் உலகக்கோப்பை தொடர் சாதனை மேல் சாதனை படைத்தது என்றே சொல்லலாம்.
அதிக பார்வையாளர்கள் மற்றும் இரசிகர்களின் ஈடுபாடு விளம்பரதாரர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் பொன்னான வாய்ப்பை வழங்கியது.
பல்வேறு துறைகளில் உள்ள பிராண்டுகள் உலகக்கோப்பை போட்டியை பயன்படுத்தி அதிக பார்வையாளர்களைச் சென்றடையச் செய்தன, இது விளம்பரச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாயில் ஏற்பட்ட இந்த எழுச்சி போட்டியின் பொருளாதார தாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.
போட்டியின் பொருளாதார தாக்கம் உள்ளூர் வணிகங்கள் பெரிதும் நன்மை அளித்தது. போட்டி நடைபெற்ற நகரங்களில் விற்பனையாளர்கள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் என உள்ளூர் பொருளாதாரங்களுக்கு உலகக்கோப்பை தொடர் பங்களித்தது.
மேலும், போட்டி நடத்தும் நகரங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை தூண்டியது, ஸ்டேடியம் மேம்பாடுகள் மற்றும் நகர்ப்புற அழகுபடுத்தும் திட்டங்கள் உட்பட, உள்ளூர் சமூகங்களுக்கு நீண்ட கால பலன்கள் உள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளூர் மற்றும் தேசிய வரி வருவாய்க்கு பங்களித்தன. இதன் மூலம் இந்தியா உலகக்கோப்பையில் தோல்வியடைந்தாலும் பொருளாதார ரீதியா இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.