பரணி தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்?
Jul 26, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரணி தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்?

பரணி தீபம் என்றால் என்ன? பரணி தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

Web Desk by Web Desk
Nov 25, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது தீபம் தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம். சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருள்கிறார் என்பதே அதன் பொருளாகும்.

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 10ஆம் தேதி ( நவம்பர் 26) ஞாயிறுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

பரணி தீபம் என்றால் என்ன?

கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் “பரணி தீபம்” என்று பெயர் பெற்றது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. இந்த ஆண்டு பரணி தீபம் இன்று (நவம்பர் 25) அன்று ஏற்றப்படுகிறது.

பரணி தீபம் எப்போது எந்த நேரத்தில் ஏற்றவேண்டும்?

ஐந்து பெரிய அகல் விளக்குகளில் நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது.

பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. ஆனால் நாம் வீடுகளில் காலையில் ஏற்றுவதை விட மாலையில் ஏற்றி வழிபடலாம்.
சிவபெருமானை வேண்டி வணங்கக்கூடிய பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் பாவங்கள் அழிக்கப்படும் என்பது ஐதீகம்.

விளக்கேற்றும் நேரம்:

மாலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளிலிருந்து விமோசனம் பெற, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று ஏற்றக்கூடிய பரணி தீபத்தை வீட்டிலும் முறையாக ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை ஏற்றுவது தான் விசேஷம்.

ஒரு தாம்பூலத் தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள், குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

சிவன் சக்தியின் அருள்:

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும் பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

Tags: thiruvanaamalaibarani deepam
ShareTweetSendShare
Previous Post

அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு

Related News

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies