சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டுகிறது. கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரின் சமத்துவச் சிலை மற்றும் நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டி பேசிய பாரதப் பிரதமர் மோடி, நவம்பர் 26 -ம் தேதி இந்திய அரசியலமைப்புத் தினமாகக் கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டத்தை அறிமுகம் செய்தது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் மதிப்பை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களையும், சிந்தனைகளையும், மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின்படி, இந்தியா ஒரு இறையாண்மைமிக்க ஜனநாயக குடியரசு நாடாகும். நாட்டுக் குடிமக்களுக்கான நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்தை உறுதிபடுத்துகிறது.