10 வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை இடைவெளி விடப்பட்டது.
இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து இன்று முதல் மீண்டும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இன்று மாலை நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் சென்னையின் எப்சி – கிழக்கு வங்காளம் அணிகள் மோத உள்ளன.
இதுவரை முடிவடைந்த லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை அணி 7-வது இடத்திலும், கிழக்கு வங்காளம் 10-வது இடத்திலும் உள்ளன. எனவே புள்ளி பட்டியலில் ஏற்றம் காண இரு அணிகளும் தீவிர முயற்சியுடன் விளையாட உள்ளன.