சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்ததகாவும், தற்போது தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்தார்.
மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் உள்ளதாகவும், . தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாகவும், மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என்றும், நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார்..