நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் என்பவர் சிபிஐயில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவு சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார், அவரின் புகாரின் அடிப்படையில், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விஷயத்தை நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணைக்கு அனுப்பியுள்ளார். அந்த விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்பித்துள்ளது.
இந்நிலையில், லோக்பால் உத்தரவின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதகா கூறப்படுகிறது. பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணையின் முடிவின் அடிப்படையில் எம்.பி.க்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வது குறித்து சிபிஐ முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
லோக்பால் உத்தரவின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதால், ஊழல் தடுப்பு அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.