கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீப திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கார்த்திகை தீபத் திருநாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பாக அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும். அனைவர் இல்லங்களையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். இறைவன்… pic.twitter.com/wLth8vVzZ0
— K.Annamalai (@annamalai_k) November 26, 2023
கார்த்திகை தீபத் திருநாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும்.
அனைவர் இல்லங்களையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். இறைவன் அருள் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.