ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் மல்மோவில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஈஸ்வர் சர்மா பங்கேற்று தனது சிறப்பான பங்களிப்பு மூலம் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த பதக்கத்தை, ‘ஆட்டிசம்’ போன்ற பாதிப்புகளைக் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம் செய்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில், ஆன்லைன் வாயிலாக 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தினமும் யோகா வகுப்புகளை நடத்தி அசத்தினார்.
ஈஸ்வர் சர்மாவின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அன்றைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஈஸ்வர் சர்மாவை வெகுவாகப் பாராட்டியதுடன், விருது வழங்கியும் கௌரவித்தார்.
மேலும், யோகாவில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 5 முறையும், பிரிட்டன் சிட்டிசன் யூத் என்ற விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார் ஈஸ்வர் சர்மா.
வெல்டன் ஈஸ்வர் சர்மா.