பாரதீப்பில் நடைபெறும் போய்தா பந்தனா விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்கிறார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாளை ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
நாளை பாரதீப் துறைமுக ஆணையம் ஏற்பாடு செய்துள்ள போய்தா பந்தனா விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார், மேலும் பன்னோக்கு மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை (மல்டி மாடல் லாஜிஸ்டிக்) காணொலி மூலம் அவர் திறந்து வைக்கிறார்.
அத்துடன் துறைமுக நகரியத்திற்கான புதிய நீர்த்தேக்கம், நீர் சுத்திகரிப்பு நிலையம், அடுத்த தலைமுறை கப்பல் போக்குவரத்து மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு ஆகியவற்றுக்குக் குடியரசுத்தலைவர் அடிக்கல் நாட்டுகிறார். மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுடனும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடவுள்ளார்.