கடந்த 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் ரூ. 42,750 கோடி மதிப்பில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சாலை மார்க்கமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.
அப்போது, விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனால், பிரதமரின் கான்வாய், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கு, அன்றைய சரண்ஜித் சிங் சன்னி அரசை குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பிரதமரின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகக் காங்கிரஸ் அரசு பச்சைப் பொய் கூறியது.
இதனால், பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிமீறல் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, பாதுகாப்பு மீறலுக்கு மாநில காவல்துறை அதிகாரிகளே காரணம் என்று உறுதிபடத் தெரிவித்தது.
இதனையடுத்து, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, குற்றம் சாட்டப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஃபெரோஸ்பூர் காவல்துறைத் தலைவர் குர்பிந்தர் சிங், டிஎஸ்பி-க்கள் பார்சன் சிங் மற்றும் ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதீந்தர் சிங் மற்றும் பல்விந்தர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோர் முதற்கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பஞ்சாப் சிவில் சர்வீஸ் விதிகள் 1970, பிரிவு 8 -ன் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் கடும் குற்றம் செய்துள்ளதால், பணியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.